மேல்மாகாணம்- கம்பஹா மாவட்டம், வத்தளை- ஹேகித்த- அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
வேலவனே விநாயகருக் கிளையோனே சிவனார் மைந்தா
வெற்றிவேல் தாங்கி நிற்கும் உன்துணையே வேண்டுமைய்யா
நல்லவர்கள் மனம் குளிர என்றும் நீ கருணை செய்வாய்
ஹேகித்தயில் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியரே சரணம் ஐயா
ஆறுபடை வீடு கொண்டு அருளுகின்ற சிவனார் மைந்தா
ஆற்றலுடன் எழுந்து நிற்க உன்துணையே வேண்டுமைய்யா
நேர்மை கொண்டோர் வெற்றிபெற என்றும் நீ கருணை செய்வாய்
ஹேகித்தயில் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியரே சரணம் ஐயா
மேற்கிலங்கை வீற்றிருந்து துயர் களையும் சிவனார் மைந்தா
மேதினியில் தலைநிமிர உன் துணையே வேண்டுமைய்யா
பண்பாடு சிதறாமல் என்றும் நீ கருணை செய்வாய்
ஹேகித்தயில் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியரே சரணம் ஐயா
சிந்தையிலே உறைந்திருந்து வழிகாட்டும் சிவனார் மைந்தா
சிதறாத மனவுறுதி பெற்றிடவே உன்துணையே வேண்டுமைய்யா
சீர்மை நிறை வாழ்வு பெற என்றும் நீ கருணை செய்வாய்
ஹேகித்தயில் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியரே சரணம் ஐயா
காவல் செய்து காத்தருள வந்தமர்ந்த சிவனார் மைந்தா
கருணை நிறை வாழ்வு பெறஉன் துணையே வேண்டுமைய்யா
குறைகள் எமை அண்டாமல் என்றும் நீ கருணை செய்வாய்
ஹேகித்தயில் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியரே சரணம் ஐயா
அறிவுதந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் சிவனார் மைந்தா
அமைதி யெங்கும் நிலவிடவே உன்துணையே வேண்டுமைய்யா
அச்சம் என்றும் அண்டாமல் என்றும் நீ கருணை செய்வாய்
ஹேகித்தயில் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியரே சரணம் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.