சமிக கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலே இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான குற்றத்தை சாமிக்க கருணாரத்ன ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, போட்டித் தடையோடு மேலதிகமாக, சாமிக்க கருணாரத்னவுக்கு 5,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.