டீ. சந்ரு
நானுஓயா குறுக்கு வீதியில் மீண்டும் விபத்து.
நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி நானுஓயா குறுக்கு வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்றுமாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுடன் இருவர் நுவரெலியா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
