நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் கடுமையான நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, கேரட், லீக்ஸ், கோவா போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்றுக்கு 70 முதல் 90 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகின்றன.
இதனால், உற்பத்திச் செலவைக்கூட ஈடுசெய்ய முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
நுவரெலியாவில் உள்ள பொருளாதார மையங்களின் முதலாளிகள், உள்ளூர் விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை வாங்குவதற்குப் பதிலாக, ஊவா மாகாணத்திற்குச் சென்று அங்குள்ள விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை மலிவாகக் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால், நுவரெலியா விவசாயிகளின் மரக்கறிகள் விற்பனையாகாமல், நீண்ட காலத்திற்கு நிலத்தில் வைத்திருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால், மரக்கறிகள் அழிந்து போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும், உரம் மற்றும் மருந்து போன்றவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில், மரக்கறிகளின் விலை குறைவதால் விவசாயிகள் மிகுந்த நட்டத்தைச் சந்திக்கின்றனர்
