.பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் ஆகிய தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபாபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 24.10.2025.வெள்ளிக்கிழமை காலை 10.30மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு தொழிலாளர்களை தாக்கிய குளவி இராணிகாடு தோட்ட பகுதியில் தெழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்களையும் தாக்கியுள்ளது.
இதில் 05பெண் தொழிலாளர்களும் 01ஆண் தொழிலாளர் ஒருவருக்கு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் ஆறு பேரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
