Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

November 24, 2026

தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்
Breaking

2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

ThanaBy ThanaJanuary 3, 2026No Comments3 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2025ஆம் ஆண்டில் இலங்கையில் TikTok தளத்தில் அதிகம் தேடப்பட்ட சொற்களை TikTok
நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு இலங்கையர்கள் எவற்றில் அதிக ஆர்வம் காட்டினர்
என்பதை இத்தரவுகள் பிரதிபலிக்கின்றன. அவர்கள் பின்தொடரும் பிரபலங்கள் மற்றும்
உள்ளடக்க உருவாக்குநர்கள் (content creators), செவிமடுக்கும் இசை, நாடகத்தொடர்கள்,
சுற்றுலா செல்ல விரும்பும் இடங்கள் என இந்த ஆண்டு இலங்கையர்களின் கவனத்தை
ஈர்த்தவற்றை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன.


கிரிக்கெட் ஹைலைட்ஸ் முதல் பொழுதுபோக்கு செய்திகள், கண்டி எசல பெரஹர போன்ற
பண்பாட்டு நிகழ்வுகள் வரை 2025 தேடல் பட்டியல் பரந்துபட்டதாக உள்ளது. TikTok தேடல்
என்பது இன்று வெறுமனே காணொளிகளை பார்க்கும் தளமாக மட்டுமின்றி, அன்றாட முடிவுகளை எடுக்கவும், நிகழ்நேர தகவல்களை அறியவும் பயன்படும் ஒரு தேடல் கருவியாக மாறியுள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது.

மக்கள் TikTok-ஐ வெறுமனே காணொளிகளைப் பார்க்க மட்டுமல்லாமல், Trending விடயங்களை அறிய, மறக்கமுடியாத தருணங்களை மீட்டுப்பார்க்க, சுற்றுலா இடங்களை ஆராய, தங்களுக்கு ஏற்ற உள்ளடக்கங்களை கண்டறிய என பல்வேறு தேவைகளுக்காக மக்கள் TikTok-ஐ நாடுகின்றனர்.

;இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையில் TikTok தேடல் ஓர் இன்றியமையாத அங்கமாக
மாறியுள்ளது" என TikTok நிறுவனத்தின் தெற்காசிய உள்ளடக்க செயல்பாட்டுத் தலைவர் உமைஸ் நவீட் கூறினார்.

மக்கள் வெறுமனே காணொளிகளை பார்ப்பதுடன் நின்றுவிடாமல், நிகழ்நேரத்
தகவல்கள், பரிந்துரைகள் மற்றும் சூழல் விளக்கங்களை தீவிரமாகத் தேடுகின்றனர். விளையாட்டு நிகழ்வுகளை தெரிந்துகொள்ள, வார இறுதி சுற்றுலாவை திட்டமிட, புதியவற்றை கற்றுக்கொள்ள, பொருட்கள் வாங்கும் முன் மதிப்புரைகளை சரிபார்க்க என இலங்கையர்கள் தங்கள் அன்றாட முடிவுகளுக்கு TikTok-ஐ நாடுகின்றனர். இந்த ஆண்டின் தேடல் பட்டியல், TikTok எவ்வாறு இலங்கையர்களை அவர்களின் கலாச்சாரம், சமூகம் மற்றும் அன்றாட தேவைகளுடன் இணைக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது,என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் தேடல்கள் வெளிப்படுத்துவது என்ன?
இந்த ஆண்டின் தேடல்கள் பகிரப்பட்ட தருணங்களையும், அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன. கண்டி, தங்காலை போன்ற இடங்களுக்கான தேடல்கள் பயண உத்வேகத்தில் TikTok-இன் செல்வாக்கை உறுதிப்படுத்துகின்றன. உருவாக்குநர்களின் பரிந்துரைகளும் நேரடி அனுபவங்களும் பயனர்களை புதிய இடங்களை ஆராய தூண்டுகின்றன.

அதேவேளை, முக்கிய பொது உரையாடல்கள், சிறப்பு நேர்காணல்கள், பரவலாக பேசப்பட்டபொப்-கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான தேடல்கள், இலங்கையர்கள் Trends-களைஒருமித்து அனுபவிப்பதை வெளிப்படுத்துகின்றன. இவற்றை நிகழ்நேரத்தில் பின்தொடர TikTok சமூகங்களுக்கு உதவுகிறது.

விளையாட்டு, கேமிங், இசை, திரையுலகம் என 2025 பட்டியல் கலாச்சாரமும் பயன்பாடும்
ஒன்றிணையும் தளமாக TikTok உருவெடுத்திருப்பதை நிரூபிக்கிறது. இங்கு Trend ஆவது
பெரும்பாலும் பயனுள்ளதாகவும், நினைவில் நிற்பதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.

2025இல் இலங்கையில் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள் குறிப்பிட்ட
வரிசைப்படுத்தப்படாமல் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன;
அதிகம் தேடப்பட்ட showbiz பிரபலங்கள்
சபீனா யூசஃப்
தினித்தி வல்கமகே
யமீஷா ரசாதி
ஷிஹான் மிஹிரங்க
ரஷி பபா

அதிகம் தேடப்பட்ட இசைக் கலைஞர்கள்
யொஹானி
சாமர வீரசிங்க
சரித அத்தலகே
மிஹிரான்
ரவீன் தாருக

அதிகம் தேடப்பட்ட TikTok உருவாக்குநர்கள்
டினெல் வல்பொல
தசுனி செனத்மா
லோச்சி
அஷேன் சேனாரத்ன
வைல்ட் குக் புக் (Wild Cookbook)

அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள்
பெத்தும் நிஸ்ஸங்க
துனித் வெல்லாலகே
தசுன் ஷானக
கிறிஸ்டியானோ ரொனால்டோ

விராட் கோலி

அதிகம் தேடப்பட்ட இடங்கள்
கம்பொள
காலி கோட்டை
தங்காலை
கண்டி
மிரிஸ்ஸ

அதிகம் தேடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்/ நாடகங்கள்
மோட தரிந்து
ஆயு
பிக் பாஸ்
நீரா
பாட குருல்லோ

அதிகம் தேடப்பட்ட ட்ரெண்ட் / செய்தி / தருணங்கள்
வட்டவல தேயிலை விளம்பரம்
Pissu Kanna's t-shirt collab with Yureni
Blood Moon
காலி முகத்திடல் காத்தாடி திருவிழா
யேவான் டேவிட் 2025 யூரோ ஃபார்முலா ஓபன் சம்பியன்ஷிப்பில் ரூக்கி கிண்ண வெற்றி

குறிப்பிடத்தக்க தேடல்கள்
2025 Sri Lanka World
2025 Creator Search Insights
அநுர குமார திசாநாயக்க
கண்டி எசல பெரஹர

சிரச டான்சிங் ஸ்டார் 2025

அதிகம் தேடப்பட்ட பாடல்கள்/ ஒலிப்பதிவுகள்
சையாரா
சுட்டக் சுட்டக் (யொஹானி பாடல்)
தேவதூதியக் (மிஹிரான் பாடல்)
எஹேம பலுவம மாகே திஹா (யசஸ் மெதகெதர – நீரா திரைப்பட பாடல்)
ஜோடு தாலா யங் (கஜிந்து ஃபொன்சேகா)

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026
    Editors Picks

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.