நோர்வூட் கெசல்கமு ஓயாவில் மாணவன் நீரில் மூழ்கி மாயம்.
காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீரை வழங்கும் பிரதான கங்கையான கெசல்கமுவ ஓயாவில் நீராட சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் .
இவ்வாறு காணாமல் போன சிறுவன் நோர்வூட் தோட்டத்தை சேர்ந்த 16 வயது மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று மதியம் கெசல்கமுவ ஓயாவில் உள்ள ‘சில்வர் வாலா’ என்ற இடத்தில் இடம் பெற்று உள்ளது.
தனது நண்பர்கள் சிலருடன் குளிக்கச் சென்ற நிலையில்
அங்கு அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட அவரது நண்பர்கள், அவரைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நண்பர்கள் வழங்கிய தகவலின் பேரில், நோர்வூட் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, உள்ளூர் மக்களின் உதவியுடன் காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
விடுமுறை நாளில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கச் சென்ற இந்த சிறுவனின் துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் நோர்வூட் பிரதேசத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து நோர்வூட் பொலிசார் மற்றும் நோர்வூட் தோட்ட தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
