Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கைக்கடிகார மின்கலத்தை (Button Battery) விழுங்கிய 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
Breaking

கைக்கடிகார மின்கலத்தை (Button Battery) விழுங்கிய 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

ThanaBy ThanaMay 7, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கைக்கடிகார மின்கலத்தை (Button Battery) விழுங்கிய 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

காலி: கைக்கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ‘பட்டன்’ மின்கலத்தை (Button Battery) தெரியாமல் விழுங்கிய 7 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெலிகம, படவல பகுதியைச் சேர்ந்த நேஹான் தசங்க டி சில்வா என்ற 7 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவனாவான். இவன் தலாரம்ப இந்தசார வித்தியாலயத்தில் தரம் 3-இல் கல்வி கற்று வந்தான்.

வீட்டில் வீசப்பட்டிருந்த சிறிய மின்கலத்தை அச்சிறுவன் தெரியாமல் விழுங்கிய நிலையில், எக்ஸ்-ரே (X-Ray) பரிசோதனையின் மூலம் அது உறுதி செய்யப்பட்டது. பின்னர், மாத்தறை பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் மின்கலம் அகற்றப்பட்டது. இரண்டு நாட்கள் சிகிச்சையின் பின் சிறுவன் வீடு திரும்பிய போதிலும், அவனுக்கு முதுகு வலி மற்றும் வயிற்று வலி இருந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில், சிறுவன் திடீரென ரத்தம் வாந்தி எடுத்துள்ளான். உடனடியாக மீண்டும் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, எண்டோஸ்கோப்பி (Endoscopy) மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன், ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

கராபிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி யு.டி.ஏ. திஸாநாயக்க மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

மின்கலம் உடலில் இருந்தபோது ஏற்பட்ட பாதிப்பால், குடலின் கீழ்ப்பகுதியில் உள்ள பிரதான இரத்த நாளத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உருவான கடுமையான உட்புற இரத்தப்போக்கு காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மரண விசாரணையை வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகே மேற்கொண்டார். சிறிய மின்கலங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இந்தச் சம்பவம் எச்சரிக்கின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கதிர்காம பாதயாத்திரிகர்களுக்காக இன்று முதல் குமண நுழைவாயில் திறப்பு!

    July 10, 2026

    பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக “சரசவி திரியோ அபிமன்” கல்வி உதவித் திட்டம்: ஜூலை 11-ல் ஆரம்பம்

    July 9, 2026

    காலி மஹமோதர மற்றும் பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகங்களில் புதிய சிறைச்சாலைகள்! – நீதி அமைச்சர் வர்த்தமானி வெளியீடு

    July 9, 2026

    மேல் மாகாணத்தில் அதிரடி நடவடிக்கை: போதைப்பொருளுக்கு அடிமையான 239 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிக்கினர்!

    July 8, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.