தவலந்தன்னையில் விபத்தில் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலையில்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் 4 ம் திகதி மாலை 6 மணிக்கு இடம் பெற்று உள்ளது.
நுவரெலியா மாவட்ட தவலந்தன்னை பகுதியில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த பார ஊர்தியில் பூண்டுலோயா பகுதியில் இருந்து தவலந்தன்னை தன்னை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கேந்திர விகாரை பகுதியில் உள்ள சாலையில் பார ஊர்தியில் மோதுண்டு படு காயங்களுடன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபட்டு உள்ளார் என பூண்டுலோயா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பார ஊர்தியின் சாரதியை பொலிசார் கைது செய்தனர். இது குறித்து பூண்டுலோயா பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
