Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

August 21, 2026

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

August 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜெனீவா மாநாட்டில் இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!
மலையகம்

ஜெனீவா மாநாட்டில் இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!

ThanaBy ThanaJune 7, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜெனீவாவில் ஐக்கிய நாட்டு சபையின் 114 வது கூட்டத்தொடரில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்து கவனம்

 

ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமையகத்தில், சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்துடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களது தொழில் பாதுகாப்பு, பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் அவர்கள் கருத்துரைத்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதன் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதேவேளை, பெருந்தோட்டப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இதனையடுத்து, ஜெனீவாவில் உள்ள துருக்கி தூதரகத்தின் உயர்ஸ்தானிகருக்கும் எனக்கும் இடையிலான சந்திப்பின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன், பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

இந்த சந்திப்புகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்களை சர்வதேச மட்டத்தில் எடுத்துரைப்பதற்கும், எதிர்கால ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பாக அமைந்தன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்கக் கணபதி கனகராஜ் கோரிக்கை!

    August 20, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026
    Editors Picks

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.