கேகாலையில் கோர விபத்து: 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிப் பெண் ஒருவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்
கேகாலை, மொலகொட – மங்களகம பகுதியில் இடம்பெற்ற தொடர் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் இன்று (ஜூன் 22) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், சுமார் 7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதி பயிற்சிப் பாடசாலைக்குச் சொந்தமான பல வாகனங்கள் உட்பட மொத்தம் 7 வாகனங்கள் எதிர்பாராத விதமாக ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தோர்: விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
