சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தாயகம் திரும்பிய இலங்கை, களுத்துறை பெண் பரிதாப பலி
…….. …………………………………
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தில், இலங்கையின் களுத்துறை மாவட்டம், கீக்கியன கந்தையைச் சேர்ந்த, தாயகம் திரும்பிய ராசமாணிக்கம் (என்கிற ராசம், வயது 65) என்ற பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கீக்கியன கந்தையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்லையா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் சகோதரி ஆவார்.
தமிழகத்தின் சில பகுதிகளில் வசித்து வரும் தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கை, சொல்லொணாத் துயரங்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நம் மக்கள், அடிக்கடி இத்தகைய விபத்துகளில் சிக்கித் தங்கள் உயிரை இழக்கும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது.
தகவல் மற்றும் புகைப்படம்
கீக்கியனகந்தையை பிறப்பிடமாகவும் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட டார்வின்.
