Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இராகலை- 6 குடும்பங்களுக்கு நேர்ந்த அவலம்: காணி சீர்திருத்த ஆணைக்குழு மனிதாபிமானத்துடன் செயல்பட கோரிக்கை

July 14, 2026

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு.

July 14, 2026

மஸ்கெலியாவில் தேயிலைத் தோட்டத்தில் குளவிக்கொட்டு: 20 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

July 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கம்பளையில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைதுடன் விளக்கமறியலில்!
Breaking

கம்பளையில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைதுடன் விளக்கமறியலில்!

ThanaBy ThanaJuly 14, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கம்பளை பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நீண்டகாலமாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த அதிர்ச்சித் தகவல் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வௌிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகத் தொற்று காரணமாக குறித்த சிறுமி கம்பளை போதனா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதை கண்டறிந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த இரண்டு வருடங்களாகச் சிறுமி தொடர்ச்சியாக இக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கம்பளைப் பொலிஸார் கைது செய்து, கம்பளை நீதவான் சரசி ஸ்ரீ பரணமன முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கம்பளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாங்க கன்னங்கர மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தயால் இலங்கக்கோன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், கம்பளைப் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி இஷாரா ஹேரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இராகலை- 6 குடும்பங்களுக்கு நேர்ந்த அவலம்: காணி சீர்திருத்த ஆணைக்குழு மனிதாபிமானத்துடன் செயல்பட கோரிக்கை

    July 14, 2026

    லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு.

    July 14, 2026

    மஸ்கெலியாவில் தேயிலைத் தோட்டத்தில் குளவிக்கொட்டு: 20 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    July 14, 2026

    லிந்துலை ஆக்ரா ஓயாவில் மூழ்கி 14 வயது பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளார்!

    July 14, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.