Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

October 13, 2026

சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

October 13, 2026

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

October 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன காலமானார்: தற்கொலை என சந்தேகம்!
Breaking

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன காலமானார்: தற்கொலை என சந்தேகம்!

ThanaBy ThanaJuly 17, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய சி.டி விக்ரமரத்ன (சந்தன தீபால் விக்ரமரத்ன) காலமானார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கியால் தமக்குத் தாமே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தலவத்துகொட, தலகேன பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

34 வருடங்களுக்கும் மேலான பொலிஸ் சேவை

கடந்த 1986 ஆம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக (ASP) தனது பொலிஸ் சேவையை ஆரம்பித்த சி.டி.விக்ரமரத்ன, சுமார் 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருவராவார்.

பதில் கடமையிலிருந்து 35 ஆவது பொலிஸ் மா அதிபராக உயர்வு

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, அப்போதைய பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.

சுமார் ஒரு வருடமும் 7 மாதங்களும் பதில் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய அவர், பின்னர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார்.

பல்வேறு சேவை நீடிப்புகளுக்கு மத்தியில் கடமையாற்றி வந்த சி.டி விக்ரமரத்ன, கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் தனது பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது திடீர் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026
    Editors Picks

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.