Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

October 13, 2026

சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

October 13, 2026

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

October 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!
Breaking

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

ThanaBy ThanaJuly 18, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Harshana nanayakara
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் தனக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் கடமைகளையும் தட்டிக்கழித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற நீதி அமைச்சர் தவறியுள்ளார். இதன் காரணமாகவே, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கையெழுத்திட்டனர்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர், தரமற்ற நிலக்கரி இறக்குமதி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வலுசக்தி அமைச்சராகச் செயற்பட்ட குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்திருந்தன.

கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி அது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன், அதற்கமைய அமைச்சருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. அங்கு குறித்த பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகவும் கடந்த ஜனவரி மாதம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகியிருந்தன.

தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களுக்குள் குழந்தைகளின் மனநிலைக்குப் பொருத்தமற்ற விடயங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் தொடர்பான பல தவறுகள் காணப்படுவதன் காரணமாகவும், அது குறித்து முறையாகச் செயற்படாததன் காரணமாகவும் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக கடந்த ஜனவரி 07 ஆம் திகதி எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026
    Editors Picks

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.