பமுணுகம – எபாமுல்ல கடற்கரைப் பகுதியில் நீராடச் சென்று நீரில் மூழ்கிக் காணாமல்போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
35 வயதுடைய பெண் ஒருவரும், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, அவர்களுடன் நீரில் மூழ்கி மாயமான 13 வயதுடைய சிறுவனைத் தேடும் பணிகள் கடற்படையினர் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தொடர்பில் பமுணுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
