70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு, இன்றைய தினம் உரிய பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது!
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குரிய இந்த முதியோர் கொடுப்பனவை, பயனாளிகள் இன்று முதல் தமது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 6 லட்சத்து 18 ஆயிரத்து 352 முதியோர்களுக்காக, 309 கோடியே 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், மேலும் 70 வயதிற்கு மேற்பட்ட 78 ஆயிரத்து 260 முதியோர்களுக்காக 39 கோடியே 13 இலட்சம் ரூபா நிதியும் இதனுடன் வைப்பிலிடப்படவுள்ளது.
இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள இலட்சக்கணக்கான முதியோர்கள் பயனடையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
