பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் தனது வீட்டில் இருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவராவார்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
