நானுஓயா – எடின்பரோ ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
நுவரெலியா, நானுஓயா – எடின்பரோ தோட்டப் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நானுஓயா – எடின்பரோ தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகரன் மற்றும் அப்புத்தளையைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன் தில்ஷன் ஆகிய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதுடன், நுவரெலியா மாவட்ட நீதிபதியின் மரண விசாரணைகளைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காகச் சடலங்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என நானுஓயாப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வி.தீபன்ராஜ
