மொரட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி எவ்வித காயங்களும் இன்றித் தப்பியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
அங்குலானைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸ் நிலையத்தினால் இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
