கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த அரசுக்குச் சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) வழங்க ரூ.4,500 மில்லியன் ஒதுக்கிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா அவர்கள் 05.07.2017 அன்று, ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்காக 4.5 ஹெக்டேர்(10 ஏக்கர்) காணியைப் பெற்றுக்கொடுக்க எடுத்த நடவடிக்கையின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து, அதனை நிறைவேற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன.
மேலும், ஹட்டன் கல்வி வலயப் பணிமனையை கினிகத்தேனைக்கு மாற்றுவதற்குப் பதிலாக, ஹட்டன் புகையிரத கட்டிடத்தில் அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
