Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

October 6, 2026

தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

October 5, 2026

மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

October 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
இலங்கை

ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

ThanaBy ThanaOctober 1, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜப்பானின் நிஷின்  நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இன்று (01) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைக் குவித்தார். வைபவ் சூரியவன்ஷி 38 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சஹான் ஆரச்சிகே மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய அணியின் கூர்மையான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இலங்கை அணி சார்பில் நுவனிது பெர்னாண்டோ அதிகபட்சமாக 15 ஓட்டங்களைப் பெற்றார். தொடக்க வீரர்களான சினேத் ஜயவர்த்தன, லசித் குரூஸ்புள்ளே மற்றும் சொஹான் டி லிவேரா உட்பட 5 வீரர்கள் ஓட்டமேதும் பெறாமல் (பூச்சியத்துடன்) ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் நேர்த்தியான பந்துவீச்சினால் இலங்கை அணி 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் பட்டேல் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய அணி, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026

    ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

    October 2, 2026

    பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

    October 2, 2026
    Editors Picks

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.