கடுகண்ணாவைப் பகுதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் மீது நேற்று (17) பெரிய பாறை ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்துப் பொலிஸார் தெரிவிக்கையில், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணித்த குறித்த பேருந்து கடுகண்ணாவைப்பகுதியை அடைந்தபோது, மலையோரத்திலிருந்து திடீரெனப் பாறாங்கல் ஒன்று சரிந்து பேருந்தின் மீது விழுந்துள்ளதாகக் குறிப்பிட்னര്.
இந்த அனர்த்தத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிகிக சிகிச்சைகளுக்காகப் பேராதனைப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடுகண்ணாவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
