‘காவன்திஸ்ஸ’ என்ற தந்தம் கொண்ட யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஹட்டுவேவ பிரதேச செயலகத்தில் திறன் அபிவிருத்தி அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே இவர் சிக்கியுள்ளார்.
சந்தேக நபரின் வீட்டில் இருந்து 12-போர் ரக துப்பாக்கி, கேப் துப்பாக்கி மற்றும் 24 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் ஏற்கனவே “டயானா” என அழைக்கப்பட்ட யானை மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
