இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நோர்வூட் – பொகவந்தலாவ – கெம்பியன் வீதியைப் புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாகப் பாதகமாகப் பாதிக்கப்பட்ட B329 நோர்வூட் – பொகவந்தலாவ – கெம்பியன் வீதியின் 10 தசம் 5 கிலோமீற்றர் முதல் 16 தசம் 8 9 கிலோமீற்றர் வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய போட்டிப் பெறுகை முறைமையின் கீழ் பெறப்பட்ட விலைமனுக்களை பரிசீலித்த உயர்மட்டப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெறுமதி சேர் வரி நீங்கலாக 756 தசம் 9 ஒன்பது மில்லியன் ரூபாய் செலவில் குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
