மாத்தறை, குடாவெல்ல பகுதியிலிருந்து 4 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போயுள்ள மீனவர்களையும் படகையும் கண்டறிந்து மீட்பதற்காக இலங்கை கடற்படையும், விமானப்படையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பித்துள்ளன.
இத்தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை கடற்படைப் பேச்சாளர், குறித்த தேடுதல் நடவடிக்கை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
