தனது கடமைகளைத் தவறவிட்டமை காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் மரணம் தொடர்பாக கடமை தவறியமை மற்றும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமை இடம்பெற்றுள்ளதா? என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
