தலவாக்கலை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரதேசவாதிகளால் பிடிக்கப்பட்டு, உடபுசல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
எஸ். கௌசல்யா
தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) இரவில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவரே வியாழக்கிழமை (29) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரெனச் சந்தேகிக்கப்படுபவரைப் பிரதேசவாசிகள் இணைந்து மடக்கிப் பிடித்து உடபுசல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, உடபுசல்லாவ பொலிஸாரால் சட்டரீதியாகக் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காகத் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
