கண்டியில் எரிவாயு சிலிண்டர்களைக் கையிருப்பில் வைத்துக்கொண்டு விற்பனை செய்ய மறுத்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
அத்துடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டி, கொட்டுகொடெல்ல வீதியிலுள்ள லிட்ரோ முகவர் நிலையமொன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று நடத்திய அதிரடிச் சோதனையின் போதே இந்த பதுக்கல் முறியடிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நுகர்வோர் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
