ஹட்டன் – போடைஸ் வீதியில் முச்சக்கர வண்டி விபத்து;4 மாணவர்கள் வைத்தியசாலையில்
ஹட்டன் – போடைஸ் வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 ஆரம்பப் பிரிவு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (04) பிற்பகல் டிக்கோயா பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவு மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, எதிரே வந்த மற்றொரு முச்சக்கர வண்டிக்கு வழிவிட முயன்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 4 மாணவர்களும் உடனடியாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மாணவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல எனவும், அவர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
