Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

November 5, 2026

மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

November 5, 2026

2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

November 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஓராண்டு நிறைவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள்
இலங்கை

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஓராண்டு நிறைவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள்

ThanaBy ThanaNovember 5, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நச்சுப்போதைப்பொருள் அச்சுறுத்தலை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் நோக்கில் 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “முழுநாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு இற்றைவரையில் ஓராண்டைப் பூர்த்தி செய்துள்ளது. நச்சுப்போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்தல், நச்சுபோதைப்பொருள் பாவனையை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மக்களை விழிப்புணர்வூட்டுதல், ஏற்கனவே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை முறையாகப் புனர்வாழ்வளித்தல் ஆகிய அடிப்படை நோக்கங்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்தத் தேசிய செயற்பாடு இதுவரை ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காகவும் சிறந்த பணிகளை ஆற்றியுள்ளது.

முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுக்கு ஓராண்டு நிறைவையொட்டி ” ஒன்றிணைந்து எழுச்சி பெற்ற ஓராண்டு” எனும் தொனிப்பொருளின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றது. அதற்கமைய, நாளை 2026 நவம்பர் 05 ஆம் திகதி மு.ப 8.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரை நச்சுப்போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபேரணியொன்றை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“நச்சுப்போதைப்பொருளிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடைபேரணி, ஜனாதிபதி செயலகம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, புனர்வாழ்வு பணியகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் பேரணியில் பொதுமக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் நாட்டில் நச்சுப்போதைப்பொருள் ஒழிப்புப் போராட்டத்தில் பங்களிப்பு வழங்கும் தன்னார்வ அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ளன. நச்சுப்போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தொடர்பில் பொதுமக்களுக்குத் வினைத்திறனாக விழிப்புணர்வூட்டுவதே இதன் நோக்கமாகும்.

அத்துடன், “முழுநாடுமே ஒன்றாக “தேசிய செயற்பாட்டின் ஓராண்டு நிறைவையொட்டி, இன்று (05) பிற்பகல் 2.00 மணிக்கு அலரி மாளிகையில் சமய மாநாடொன்றை நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ், நச்சுப்போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தகவலை சமூகமயப்படுத்தி, இப்பணிகள் தொடர்பில் ஒட்டுமொத்த சமூகத்தினரிடையேயும் நேர்மய மனப்பாங்கை வளர்க்கும் நோக்கில் நடாத்தப்படவுள்ள இந்தச் சமய மாநாட்டில்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026

    2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

    November 5, 2026

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    November 5, 2026

    பெருந்தோட்டக் காணிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் அரசுக்கு எதிர்ப்பு: அமைச்சுக்கு முன்பாக மலையக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

    November 3, 2026
    Editors Picks

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026

    மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

    November 5, 2026

    2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

    November 5, 2026

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    November 5, 2026

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026

    மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

    November 5, 2026

    2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

    November 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.