அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அச்சிடப்பட்ட நூல்களுக்குப் பெறுமதி சேர் வரி அறவிடப்பட்ட நிலையில், அப்பியாசக் கொப்பிகளுக்கு அதற்கு முன்னர் இருந்தே இவ்வரி அறவிடப்பட்டு வந்தது.
இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டும், அத்தியாவசிய கல்விசார் பொருட்கள் சாதாரண விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் சமூகத்தின் பரந்த பிரிவினருக்கு இந்நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாடப்புத்தகங்கள், சொல்லகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சிறுவர்களுக்கான சித்திரப் புத்தகங்கள், கல்விசார் வெளியீடுகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் என்பன பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
