அம்பலாங்கொடை, கந்தேகொட பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் 400 கிராம் ‘ஐஸ்’ (Ice) ரக போதைப்பொருள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மாத்தறை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று (17) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
