நானுஓயா பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
நானுஓயா, டெஸ்போர்ட் எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் இன்று (18.11.2026) காலை குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு மாணவிகள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் 6, 7 மற்றும் 8ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை சுமார் 8 மணியளவில் பாடசாலையின் காலை ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
