பதுளை மாவட்ட செயலகத்தில் விளையாட்டு துறை உத்தியோகத்தர் ஒருவர் பதுளை வின்சன்டைஸ் மைதானத்தில் வைத்து நபர் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான விளையாட்டு துறை உத்தியோகத்தர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பதுளை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பதுளை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தங்களது விளையாட்டு துறை உத்தியோகத்தர் தாக்கப்பட்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாக்கியவரை உடன் கைது செய்யுமாறு கோரியும் பதாதைதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஊவா மாகாண முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் தாக்கிய நபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா