Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பசறையில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 19வயதுடைய மகன் பலி தந்தை படுகாயம்.
மலையகம்

பசறையில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 19வயதுடைய மகன் பலி தந்தை படுகாயம்.

ThanaBy ThanaMarch 21, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பசறை பகுதியில் உந்துருளியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 19 வயதுடைய கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் பசறையில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும், மொனராகலையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டுயிருந்ந உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் உந்துருளி செலுத்தி சென்ற 19 வயதுடைய மீதும் பிடி கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உந்துருளியில் பின்னால் அமர்ந்து பயணித்த குறித்த இளைஞரின் தந்தை (வயது 50) பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மரணித்த 19 வயதுடைய இளைஞரின் சடலம் பசறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது பசறை பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று வீதியின் நடுவில் நிறுத்தப்பட்டதால் பின்னால் சென்ற லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை முந்தி செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு லொறிகளின் சாரதிகளும் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026
    Editors Picks

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.