பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட கோணக்கலை தமிழ் ஆரம்ப பாடசாலையின் அதிபராக திருமதி. எஸ். மனோகரன் பசறை வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஸரீனா பேகம் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது கோட்டக்கல்வி பணிப்பாளர்,பாடசாலை அபிவிருத்தி நிர்வாக குழுவினர், முன்னாள் அதிபர் எஸ். ரமேஷ் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நடராஜா மலர்வேந்தன்
