டி சந்ரு
இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கள் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களினால் கெல்சி தமிழ் வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் நுவரெலிய பிராந்திய இயக்குனர் அவர்களும் நிதியத்தின் பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிர ஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்,ஓஸிப் நிறுவனர்கள், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.