மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் அட்டன் – டிக்கோயா புளியாவத்தை நகர் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்
மலை சூழ்ந்த நன்னகரில் கோயில் கொண்ட விநாயகரே
வரும் காலம் எமதென்ற நம்பிக்கை தந்திடைய்யா
வெற்றிமேல் வெற்றியை நாமென்றும் பெற்றுவிட
கருணை செய்து காத்தருள்வாய் எங்கள் செல்வ விநாயகரே
புளியாவத்தை நகரினிலே கோயில் கொண்ட விநாயகரே
புத்துணர்வு தந்தெமக்கு எழுச்சியைத் தந்திடைய்யா
நம்பிக்கை கொண்டு நாமென்றும் உயர்ந்துவிட
கருணை செய்து காத்தருள்வாய் எங்கள் செல்வ விநாயகரே
மத்திய மாகாணத்தில் கோயில் கொண்ட விநாயகரே
மாண்புடன் வாழ எமக்கு வழியைநீ தந்திடைய்யா
மதிபிறழா மனவுறுதி பெற்றுவிட
கருணை செய்து காத்தருள்வாய் எங்கள் செல்வ விநாயகரே
தேயிலைத் தோட்டங்கள் சூழ கோயில் கொண்ட விநாயகரே
தேக்கமின்றி முன்னேறும் வழியைத் தந்திடைய்யா
துயரமெம்மை அண்டாத நிலையை நாம் பெற்றுவிட
கருணை செய்து காத்தருள்வாய் எங்கள் செல்வ விநாயகரே
தமிழ் மொழியின் ஒலி கேட்குமிடம் கோயில் கொண்ட விநாயகரே
தவிப்பின்றி நிம்மதியாய் வாழ வழி தந்திடைய்யா
திறமையுடன் முன்னேறும் வழியை நாம் பெற்றுவிட
கருணை செய்து காத்தருள்வாய் எங்கள் செல்வ விநாயகரே
உழைப்பாளர் வாழும் இடம் அருகு கோயில் கொண்ட விநாயகரே
உண்மை நெறி நாம்வாழ எமக்கு வழி தந்திடைய்யா
உரிமையுடன் வாழும் நிலை நாம் பெற்றுவிட
கருணை செய்து காத்தருள்வாய் எங்கள் செல்வ விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.