தொடர்ந்து பல மாத காலமாக வெவெஸ்ஸ தொழிற்சங்க பிரிவில் தொழிற்சாலை அதிகாரிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை நிலவி வந்தது.

இதற்கிடையில் தொழிற்சங்க அதிகாரி செய்த தவறுக்கு தொழிலாளர் வேலை நிறுத்தப்பட்டது பேச்சு வார்த்தைக்கு பின்னர் குறித்த தொழிலாளிக்கு இடமாற்றப்பட்டு தேயிலை மலைக்கு செல்லுமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து
இன்றைய தினம் குறித்த பகுதியில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

விடயம் அறிந்து களத்திற்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்தும் வெவெஸ்ஸ தோட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்தின் நிறை அதிகரித்தல் மேலதிகமாக பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்தின் நிறைக்கு ஏற்றார் போல ஊதியம் வழங்கப்படாமை என பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக இன்றைய தினம் தோட்ட நிர்வாகத்தினரின் அடாவடி செயற்பாட்டுக்கு எதிராக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் குறித்து தொழிலாளிக்கு மீண்டும் தொழிற்சாலை பிரிவில் வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் உறுதி அளித்ததுடன் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளும் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தது, மேலும் தோட்ட நிர்வாகத்தினருக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இக் காலகட்டத்தில் தோட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்வு பெறப்பட வேண்டும் அவ்வாறு நிலைமை சீர் செய்யப்படாவிடில் ஒத்துழையாமை போராட்டத்தை மேற்கொள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. என கருத்து தெரிவித்தார் ..
