அல்மா கிரேமண்ட் கந்தப்பளையில் அவ்வூர் இளைஞர்களினால் எழுகை நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளின் நிறைவையொட்டி புத்தக கண்காட்சி , சிறார்களுக்கான ஓவிய போட்டி மகளிர் தினத்தையொட்டி மகளிருக்கான கலாசார விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்வை எழுகை அமையம் ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கு பாம் பௌன்டேசன் அனுசரணை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சுமார் 4000 புத்தகங்கள் புத்தக கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததோடு 70 போட்டியாளர்கள் ஓவிய போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் மகளிருக்கான விளையாட்டுப்போட்டியில்
ஊர் பெண்கள் மிக உற்சாகமாக பங்குபற்றியிருந்தனர். கலை நிகழ்ச்சிகள் யாவும் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்திருந்தன. இந்நிகழ்வுக்கு ஊர் பொதுமக்கள் சிறார்கள், இளையவர்கள் ஆசிரியர்கள் காவல்துறை அதிகாரிகள் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.


