ஆடவருக்கான ஐ.சி.சி. டி:20 பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை ஷகிப் அல் ஹசன் பெற்றுள்ளார்.
சட்டோகிராமில் புதன்கிழமை நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் போதே 36 வயதான பங்களாதேஷ் வீரர் இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்த போட்டியில் ஷகிப் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தற்சமயம் அவர் ஐ.சி.சி. டி:20 பந்து வீச்சாளர்களில் 20.67 சராசரியுடன் மொத்தமாக 136 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக நியூஸிலாந்து வீரர் டிம் சவுத்தி 134 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
சகிப் 2006 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராகத் தனது முதல் டி:20 போட்டியில் அறிமுகமானர்.
மேலும் இதுவரை 114 சர்வதேச டி:20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
குறிப்பாக ஆடவருக்கான ஏழு ஐ.சி.சி. டி:20 உகலக் கிண்ண தொடர்களில் அவர் விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
