Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 16வது பருவகால ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்.
விளையாட்டு

16வது பருவகால ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்.

ThanaBy ThanaMarch 30, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் இண்டியன் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியுடன் நாளை 31-ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி அஹமதாபாத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்ஹி கெப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய பத்து அணிகள் பங்குபற்றுகின்றன.

நான்கு வருடங்களின் பின்னர் பழைய முறைமைப்படி சகல அணிகளும் சொந்த மைதானத்திலும், அந்நிய மைதானத்திலும் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் எல்பிஎல் சுற்றுப் போட்டி நடைபெறவிருக்கிறது.

மார்ச் 31-ம் திகதி ஆரம்பமாகி எட்டு வாரங்கள் தொடரும் 16ஆவது எல்பிஎல் அத்தியாயத்தில் 74 போட்டிகள் 12 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக கடைசி 3 அத்தியாயங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய மைதானங்களிலேயே நடத்தப்பட்டன.

2020இல் இந்தியாவுக்கு வெளியே ஐக்கிய அரபு இராச்சியத்தில் முழுப் போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2021இல் ஆரம்பப் போட்டிகள் இந்தியாவின் சில மைதானங்களிலும் கடைசிப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் அரங்கேறின.

2022இல் லீக் போட்டிகள் மும்பை, புனே ஆகிய மைதானங்களிலும் இறுதிச் சுற்று கொல்கத்தா, அஹமதாபாத் மைதானங்களிலும் நடத்தப்பட்டன.

இருபது 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கிண்ணஸ் சாதனையை ஏற்படுத்தும் வகையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் 101,556 இரசிகர்கள் 2022 இறுதிப் போட்டியைக் கண்டுகளித்தனர்.

அந்த இறுதிப் போட்டியில் முதலாவது எல்பிஎல் சம்பியன் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை முற்றிலும் எதிர்பாராத விதமாக 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் சம்பியனாகியிருந்தது.

குஜராத் டைட்டன்ஸ் தனது அறிமுக அத்தியாயத்திலேயே சம்பியனானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

போட்டி முறைமை

2023 ஐபிஎல் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் பத்து அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளை சொந்த மைதானத்திலும் 7 போட்டிகளை அந்நிய மைதானத்திலும் விளையாடவேண்டும்.

10 அணிகளும் 2 குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒரு குழுவில் இடம்பெறும் அணிகள் ஒன்றையொன்று சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும் 2 தடவைகள் எதிர்த்தாடும். அதாவது ஒவ்வொரு அணியும் தத்தமது குழுவில் 8 போட்டிகளில் விளையாடும். அதேவேளை மற்றைய குழுவில் இடம்பெறும் 4 அணிகளை ஓரு தடவையும் எஞ்சியிருக்கும் அணியை 2 தடவைகளும் எதிர்த்தாடும்.

இறுதிச் சுற்று 4 போட்டிகளைக் கொண்டதாகும்.லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் முதலாவது தகுதிகாண் சுற்றில் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

அணிகள் நிலையில் 3ஆம், 4ஆம் இடங்களைப் பெறும் அணிகள் நீக்கல் போட்டியில் விளையாடும். நீக்கல் போட்டியில் வெற்றிபெறும் அணி முதலாவது தகுதிகாணில் தோல்வி அடைந்த அணியை 2ஆவது தகுதிகாண் போட்டியில் சந்திக்கும்.

இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதலாவது தகுதிகாண் போட்டியில் வெற்றியீட்டிய அணியை 16ஆவது ஐபிஎல் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும்.

அணித் தலைவர்கள்

சென்னை சுப்பர் கிங்ஸ்: மஹேந்த்ர சிங் தோனி

டெல்ஹி கெப்பிட்டல்ஸ்: டேவிட் வோர்னர்

குஜராத் டைட்டன்ஸ்: ஹார்திக் பாண்டியா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பதில் தலைவர் நிட்டிஷ் ரானா (வழமையான அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் உபாதையிலிருந்து மீளவில்லை)

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ்: கே. எல். ராகுல்

மும்பை இண்டியன்ஸ்: ரோஹித் ஷர்மா

பஞ்சாப் கிங்ஸ்: ஷிக்கர் தவான்

ராஜஸ்தான் றோயல்ஸ்: சஞ்சு செம்சன்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: பவ் டு ப்ளெசிஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஏய்டன் மார்க்ராம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026
    Editors Picks

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.