மொ/திருவள்ளுவர் தமிழ் மகா வித்தியாலயத்தில், புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை விளையாட்டு திடலில் ஆசிரியர்கள் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் முதல் நிகழ்வாக கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அண்மையில் இடம்பெற்றது.

இதில் பெண்கள் அணி, ஆண்கள் அணி என தனி தனியே ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து குழு அமைக்கப்பட்டு போட்டியில் பங்குபற்றினர். பெண் ஆசிரியர்கள் முதல் நிகழ்வாக இப்படி பாடசாலை மைதானத்தில் மாணவர்களுடன் விளையாடியது சிறப்பம்சமாகும்.

வெற்றி பெற்ற ஆசிரியர்களையும், மாணவர்களையும் அதிபர் திருமதி P. ரேணுகாதேவி அவர்கள் பாராட்டி கௌரவித்தார்.தொடர்ந்து விளையாட்டு திடலை அமைத்துக்கொடுத்த பெ ற்றார்களுக்கும், போட்டி ஏற்பாட்டு குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததோடு எதிர்காலத்தில் இவ்வாறான விளையாட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகள் மேலும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

