ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரனின் தலைமையில் மத்தியமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து அபியச நடமாடும் சேவை நேற்று வியாழக்கிழமை ஸ்ரீ பாத சிங்கள வித்யாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதில் மத்திய மாகாணக்கல்வி பணிப்பாளர் அமரசிறி பியதாச மற்றும் மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஹட்டன் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மாகாணத்தினதும் , ஹட்டன் வலயக்கல்வி பணிமனையினதும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்

இதன்போது பாடசாலைகளின் திட்டமிடல், ஒழுக்காற்று நடவடிக்கை, சேவை நிரந்தரமாக்கல் , விடுமுறை, ஆசிரியர் விடுவிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட 16 விடயங்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

கடந்த வருடம் பரீட்சை பெறுபேறுகள் குறைந்த அதிபர்களுடனான சந்திப்பும் அன்றையதினம் ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் மத்தியமாகாண கல்வி பணிப்பாளரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

