லிந்துல இராணிவத்தை வீர தமிழர் நற்பணி மன்றத்தின் நூல் நிலையத்துக்கு ஒடிங்டன் தேயிலை உற்பத்தி நிலையத்தின் உதவியுடன் தலவாக்கலை லிந்துல நகர சபையில் பொது நூலகத்திலிருந்து சுமார் 150 புத்தகங்கள் கிடைக்கப்பெற்றன.

அதனுடன் வேல்ட் விஷன் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கான ஆறு தம்ரோ மேசைகளும் 24 கதிரைகளும் கிடைக்கப் பெற்றனர்.

இந்நிகழ்வு 7.4.2023 வீர தமிழர் நற்பணி மன்ற நூல் நிலையத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் தலவாக்கலை லிந்துல நகர சபையின் நூல் நிலையம் சார்பாக,
1: N.G.N Thushari Liyanarchchi ,
2: kinsly gomas,
3: shelomiya ramesh அவர்களும்,
ஒடிங்டன் தேயிலை உற்பத்தி நிலையம் சார்பாக செல்வி செபஸ்டினா அவர்களும் விசேட விருந்தினராக ஓய்வு பெற்ற அதிபர் திருமதி பிரேமா அவர்களும் கலந்து கொண்டார்கள் இந்நிகழ்வில் வீர தமிழர் நற்பணி மன்றம் இராணிவத்தை நிர்வாகக்குழு மற்றும் செயல் குழு உடன் இராணிவத்தை பொதுமக்கள் அனைவரும் இணைந்து கொண்டார்கள்.
தகவல். K.பிரசாந்

