இங்கிலாந்து, நீயூமோள்டன் அருள்மிகு ஸ்ரீ திருத்தணிகை வேல்முருகன் திருக்கோயில்

அலை கடல் சூழ வளநாட்டில் கோயில் கொண்ட வேல்முருகா
அனைத்துலகும் நலன் பெறவே அருளளிப்பாய்
அச்சமின்றி வாழும் நிலை உருவாக்க வரவேண்டும்
நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா

தர்மம் நிலை நாட்ட அவதரிக்கும் ஐயனே வேல்முருகா
தடுமாறா நல்வாழ்வை அனைவருக்கும் தந்தருள்வாய்
திடங்கொண்டு வாழும் நிலை உருவாக்க வரவேண்டும்
நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா
நேர்மை கொண்டோர் இதயங்களில் நிறைந்திருக்கும் வேல்முருகா
நெஞ்சமெல்லாம் அமைதிபெற உன்னருளை வழங்கிடுவாய்
நொந்து மனம் வாழா நிலை உருவாக்க வரவேண்டும்
நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா
தமிழ் மொழியின் காவலனாய் ஆட்சி செய்யும் வேல்முருகா
தரணியிலே தமிழ் வளர உன்னருளைத் தந்தருள்வாய்
திறமைமிகு எதிர்காலம் உருவாக்க வரவேண்டும்
நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா
குவலயத்தைக் காத்துயிர்கள் வாழவைக்கும் வேல்முருகா
குறையின்றி வாழ்வதற்கு உன்னருளைத் தந்தருள்வாய்
குற்றங்கள் அண்டா
நிலை உருவாக்க வரவேண்டும்
நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா
வேல்தாங்கி நின்றருளும் வேல்முருகா
வெற்றி நிறை வாழ்வுக்கு உன்னருளை வழங்கிடுவாய்
வேதனைகள் இல்லா நிலை உருவாக்க வரவேண்டும்
நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.