பதுளை கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஸ்கொட கெந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது மகனது தாக்குதலுக்கு இலக்கான தந்தை பலத்த காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 57 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த நபர் என்பதுடன் 30 வயதுடைய மகன் கஹட்டரூப்ப பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கஹட்டரூப்ப பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
