அக்கரப்பத்தனை, மன்றாசி நகரில் முச்சக்கர வண்டி சாரதிக்கும்
மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிவதாவது முச்சக்கர வண்டியை பின்னால் செலுத்தும் போது அதன் பின்னால் இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் ஏற்பட்ட வாய் தகர்க்கம் கைகலப்பாக மாரி இரு குழுக்களுக்குல் மோதலாக மாரி சிலருக்கு காயம் ஏற்பட்டு அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சிலர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்திய சாலைக்கு அனுப்ப பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
