மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி- மேரிவிலை மேற்பிரிவு அருள்மிகுஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

வளந்தந்து வாழ்வளிக்கும் தாயே முத்துமாரி
வளங்கொண்டு நாம் வாழ உன்கருணை வேண்டுமம்மா
நலம் கொண்ட உயர்வாழ்வு எமை வந்தடைய
உடனிருந்து எமைக்காப்பாய் எங்கள் முத்துமாரியம்மா

மலை சூழ்ந்த திருவிடத்தில் இருந்தருளும் தாயே முத்துமாரி
மாண்புடனே நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா
மேன்மை கொண்ட உயர்வாழ்வு எமை வந்தடைய
உடனிருந்து எமைக்காப்பாய் எங்கள் முத்துமாரியம்மா
கருணைமழை பொழிந்துலகைக் காக்கும் தாயே முத்துமாரி
கவலையின்றி நாம் வாழ உன்கருணை வேண்டுமம்மா
குற்றமில்லா நிறை வாழ்வு எமை வந்தடைய
உடனிருந்து எமைக்காப்பாய் எங்கள் முத்துமாரியம்மா
அன்புடனே அரவணைத்து ஆறுதலைத் தரும் தாயே முத்துமாரி
அச்சமின்றி நாம் வாழ உன்கருணை வேண்டுமம்மா
எழுச்சிமிகு பெரு வாழ்வு எமை வந்தடைய
உடனிருந்து எமைக்காப்பாய் எங்கள் முத்துமாரியம்மா
நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து நிம்மதியைத் தரும் தாயே முத்துமாரி
மகிழ்ச்சியுடன் நாம் வாழ உன்கருணை வேண்டுமம்மா
மானமுடை நிறை வாழ்வு எமை வந்தடைய
உடனிருந்து எமைக்காப்பாய் எங்கள் முத்துமாரியம்மா
மேரிவிலை தோட்டமதில் கோயில் கொண்ட தாயே முத்துமாரி
மேதினியில் மேன்மையுடன் நாம் வாழ உன்கருணை வேண்டுமம்மா
மோதலில்லா நிறைவாழ்வு எமை வந்தடைய
உடனிருந்து எமைக்காப்பாய் எங்கள் முத்துமாரியம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.